
யாழ்ப்பாணத்தில் தற்போது வசிக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை படைத்தளத்திற்கு அழைத்து கலந்துரைடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது இராணுவம்.
இராணுவத்தின் 512 ஆவது பிரிகேட் கட்டளைத் தளபதியின் படைத்தளத்தில் இன்று நடைபெற்ற இச் சந்திப்பில் 50 க்கும் மேற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
இச் சந்திப்பில் 512ஆவது பிரிகேட் தலைமையகத்தின் உயர் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டதாகவும், நாட்டின் தற்போதைய சூழல் தொடர்பாக கலந்துரையாடியதோடு, புதிய கட்டுப்பாடுகள் சிலவற்றையும் விதித்துள்ளதாக அறியமுடிகிறது.