
இலங்கையில் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருந்த சமூக வலைத்தளங்கள் மீதான உதடையை நீக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தடை நீகம் செய்யாவிடின் முழுமையாக இலங்கை பாவனையில் இருந்து பெளியேறப்போவதாக சமூகவலைத் தளங்கள் நேற்று தெரிவித்திருந்த நிலையில் இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தன்றும் அதன் பின்னருமாக இலங்கையில் நடாத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் சுமார் 450 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிலையில் இலங்கையில் சமூகவலைத் தளங்கள் மீதான தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.