
கநகராயன்குளம் பகுதியில் அமைந்திருந்த தவுத் உணவகம், மற்றும் அதன் விடுதிப் பகுதியில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரும், இராணுவத்தினரும் இணைந்து நடாத்திய தேடுதலின் போதே இவை சிக்கியுள்ளன.
தாவூத் உணவகத்தின் விடுதி மற்றும் மலசலகூடத்தினை சோதனையிட்ட சமயத்தில் மலசலகூடத்தில் கறுப்பு நிற பிளாஸ்ரிக் பேப்பரால் சுற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டு, மூன்று மிதிவெடிகள், பதினைந்து தோட்டாக்கள், இரண்டு ஆர்.பி.ஐி. குண்டுகள் என்பனவே கைப்பற்றப்பட்டுள்ளன.