Home செய்திகள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சஹ்ரானின் நெருங்கிய சகா கைது!

ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட சஹ்ரானின் நெருங்கிய சகா கைது!

171
0

தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவரான சஹ்ரானின் நெருங்கியவரும் அவரின் தம்பியுடன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டவருமான 38 வயதுடைய அப்துல் கபூர் முகமது ரிஸ்வின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (30/04) காலை காத்தான்குடி 2 ஆம் பிரிவு ரெலிகோம் வீதி ஏ.எச்.எம். பௌசி மாவத்தையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அப்துல் கபூர் முகமது ரிஸ்வின், கடந்த சில நாட்களுக்கு முன்னர்  ஐ.எஸ். ஐ. எஸ். தீவிரவாத அமைப்பின் உறுப்பினரும்  தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தின் தலைவருமான சஹ்ரானின் தம்பியுடன் மாத்தறை கொழும்பிற்கு சென்று ஆயுதங்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளதாக அதிரடிப்படையினரின் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.