Home முக்கிய செய்திகள் தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்த 34 பேர் கைது!

தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருந்த 34 பேர் கைது!

192
0

நாடு முழு­வ­தும் முன்­னெ­டுக்­கப்­பட்ட தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளின்­ போது தற்கொலைதாரிகள் 34பேரைக் கைது செய்­துள்­ள­தா­கப் பொலிஸ் தரப்­பு தெரி­வித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்­க­ளி­டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­க­ளில், தற்­கொலை செய்­வ­தையோ அல்­லது தற்­கொலை தாக்­கு­தல்­க­ளையோ இஸ்­லாத் அனு­ம­திக்­க­வில்லை என்று கூறி­னா­லும் அவர்­க­ளில் சிலர் தீவிர அடிப்­ப­டை­வா­தத்­து­டன் இருந்­த­தால் ஒன்­றும் செய்ய முடி­யா­மல்­போ­னது என கூறி­யுள்ளதாகவும்.

சஹ்­ரான் ஹாசீம் தலை­மை­யி­லான தேசிய தௌஹீத் ஜமா அத், அர­சி­யல் பிரிவு மற்­றும் இரா­ணு­வப்­பி­ரிவு என்று இயங்­கி­ய­தா­க­வும் அதில் இரா­ணு­வப்­பி­ரிவு தற்­கொ­லைத் தாக்­கு­தல்­களை நடத்­தத் தீர்­மா­னித்­த­தா­க­வும் கைதா­னோர் கூறி­யுள்­ள­னர்.

இது தொடர்­பில் மேல்­மட்­டத்­தி­டம் கூறி­ய­போது அது கணக்­கில் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­றும், தற்­கொலை தாக்­கு­தல் நடத்­து­வதை பெரு­மை­யாக சிலர் கரு­தி­னார்­கள் என்­றும் கைதான சந்­தே­க­ந­பர்­கள் தெரி­வித்­துள்­ள­னர் என்று பொலிஸ் வட்­டா­ரங்­க­ளில் இருந்து அறிய முடி­கின்­றது.