Home செய்திகள் யாழ்-நாவாந்துறையில் தீவிர தேடுதல் – மக்கள் வெளியே செல்ல தடை!

யாழ்-நாவாந்துறையில் தீவிர தேடுதல் – மக்கள் வெளியே செல்ல தடை!

166
0

தொடர் குண்டுத்தாக்குதல்கள், வெடிபொருட்கள் மீட்பு, அரபு மொழி சுவரொட்டிகள் மீட்பு என நாடே அதிர்ச்சிக்கும், அசாதாரண சூழலுக்குள்ளும் சிக்குண்டுள்ள நிலையில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் யாழ்.நாவாந்துறை பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் நாவாந்துறை, ஐந்து சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ள படையினரும், காவல்துறையினரும் அப்பகுதியில் தொடர்மாடியின் கீழ் பதுங்கு குழி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த பகுதிக்குள் உட் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடப்பட்டுவருகின்றன.