
சாய்ந்தமருது, வொலிவோரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் வசித்துவந்த 460 முஸ்லீம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது;
கல்முனை – சாய்ந்தமருது, வொலிவோரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் இராணுவத்தினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கிராம மக்கள் அனைவரையும் எம்.எம்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு அனுப்பப்பட்டதன் பின்னரே இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதநால் 460 குடும்பங்களைச் சேர்ந்த 1350 பேரே காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன்.