Home முக்கிய செய்திகள் சாய்ந்தமருது தாக்குதல் – உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு!

சாய்ந்தமருது தாக்குதல் – உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு!

193
0

நேற்று முந்தினம் சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதோடு மூவரின் பெயர் விபரங்கள்ஐயும் வெளியிட்டுள்ளது ஐ.எஸ் அமைப்பு.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் அதிகார பூர்வ செய்தி சேவையான “அமாக் செய்தி” வெளியிட்டுள்ள செய்தியில், சாய்ந்தமருது பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரும், படையினரும் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டு தாக்குதல் நடாத்திய போது பதில் தாக்குதல் நடாத்தி பின் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க செய்ததில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த மூவர் உட்பட 17 பேர் பலியானதாக தெரிவித்துள்ளது.

அத்தோடு அத்தாக்குதலை நடாத்தியதாக அபு அஹமட், அபு சுபியான், மற்று அபு அல் க்வாக ஆகிய மூன்று போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

அப் புகைப்படத்தில் சஹறானுடன் குறித்த தாக்குதலின் பிரதான தற்கொலைக் குண்டு தாரி காணப்படுகிறார். தற்கொலை அங்கியுடன் குண்டுத்தாக்குதலை நடாத்துவதற்கு சற்று முன்னர் எடுத்ததாக நம்பப்படும் காணொளிப்பதிவில் குறித்த நபர் ஆவேசமாக உரையாற்றும் காணொளிப்பதிவு வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.