Home முக்கிய செய்திகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ள உயிர் தப்பிய சிறுமி!

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள உயிர் தப்பிய சிறுமி!

172
0

குண்டுதாரிகள் குடும்பமாக வீட்டினுள் இருந்து தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடாத்தியதில் 1 பேர் கொல்லப்பட ஒரு சிறுமியும், ஒரு பெண்ணும் கடும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியும், பெண்ணும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

குண்டுத்தாக்குதலை நடாத்திய தீவிரவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுமி எண்ட வாப்பா.. எண்ட வாப்பா என மட்டுமே அழுதவாறு இருப்பது உலகின் பார்வையை அச் சிறுமி மீது திருப்பியுள்ளது.

குண்டுத்தாக்குதலை நடாத்திய மூன்று தீவிரவாதிகளும் தமது குடும்பங்களோடு தற்கொலைக் குண்டை வெடிக்க வைத்துள்ளதாகவும், அதற்கு ஆதாரமாக குண்டை வெடிக்க வைப்பதற்கு சற்று முன்னர் காணொளிப்பதிவில் தம்மை இராணுவம் நெருங்கி விட்டது. நாம் தாக்குதல் நடாத்துவோம், தாம் இறந்தாலும் ……. என ஆவேசமாக கூறி பதிவு செய்த காணொளியில் அவர்களுடன் சிறுவர்களும் இருப்பது பதிவாகியுள்ளது.

இத் தாக்குதல் சம்பவத்தில் மூன்று தீவிரவாதிகள் உட்பட ஆறு சிறுவர்களும், மூன்று பெண்களும், ஆறு சிறுவர்களும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.