Home உலக செய்திகள் நா.க.த.அ பிரித்தானிய தேர்தல் களம்!

நா.க.த.அ பிரித்தானிய தேர்தல் களம்!

324
0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாம் பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதற்காக பிரித்தானியாவில் இலண்டன் உட்பட புறநகர் பகுதிகள் உள்ளடங்கலாக மொத்தம் 20 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் மக்கள் செறிவாக வாழும் இலண்டன் பகுதிக்குள் மட்டும் 13 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பணியாளர்கள் மிகவும் உட்சாகமாகவும், அதே வேளை வருகின்ற வாக்காளர்களுக்கு உரிய விளக்கத்தை அளித்து வாக்களிக்க ஒத்துழைப்புக்கள் வழங்குவதையும் காணமுடிந்தது.

அதே போன்று வாக்காளர்களிடம் அடையாள அட்டையை வாங்கி பெயரை பதிவு செய்வதோடு , ஏற்கனவே தபால் மூல வாக்குப் பதிவிற்கு பதிந்தவர்களா என்பதையும் இரட்டை சரி பார்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு பதிவு செய்தவர்கள் வாக்களிக்க வரும் பட்சத்தில் அவர்கள் வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க முடியாது என திருப்பி அனுப்புவதையும் காணமுடிந்தது.

இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 14:00 வரையான 5 மணீ நேர வாக்குப் பதிவுகளில் சுமாரான வாக்குப் பதிவுகளே இடம்பெற்றுள்ளன.

கால நிலை, மற்றூம் வேலை நேரம் என்பதால் இன்று மாலை அதிகளவான மக்கள் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப் படுகிறது.