Home செய்திகள் 39 நாடுகளுக்கான வருகை தரு வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம்!

39 நாடுகளுக்கான வருகை தரு வீசா தற்காலிகமாக இடைநிறுத்தம்!

238
0

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 39 நாடுகளுக்கான வருகை தரு வீசா (on arrival visa) வழங்கும் நடைமுறையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இலங்கையின் சில இடங்களில் கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்தும், நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டும் மறு அறிவித்தல்வரை இந்த நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் ஆஸ்திரியா, பல்கேரியா, கம்போடியா, குரோசியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸிடொனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மன், கிறிஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லித்வியா, லித்துவேனியா, லக்ஸம்பேர்க், மோல்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ரோமானியா, சிலோவேனியா, சுவீடன், ஸ்பானியா, ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூஸிலாந்து, மலேசியா, தாய்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு வருகை தரு வீசா வழங்கப்படவிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.