Home செய்திகள் முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்பு – மூவர் கைது!

முகத்துவாரத்தில் 21 கைக்குண்டுகளும், 6 வாள்களும் மீட்பு – மூவர் கைது!

168
0

கொழும்பு – முகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும் 6 வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.