
நாட்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து அச்சம் காரணமாக நீர்கொழும்பில் உள்ள ஃபாஸுல் மசூதியில் பாக்கிஸ்தானை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட அஹமதியா முஸ்லிம்கள் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்தவர்களில் சிலர் பேசாலையில் உள்ள மசூதிக்கும் அனுப்பப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொழும்பு கொம்பனிவீதி பள்ளியவீதிய பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.