
கடந்த மூன்று நாட்களாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 40 ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் முல்லைத் தீவில் மட்டும் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு பலத்த பாதுகாப்பி கெடுபிடிகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் மாவட்ட பொதுவைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகள் பேரூந்து நிலையம் போன்ற இடங்களில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் மற்றும் பொலிசார் பாதுகாப்பு நடவ்டிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .மேலும் குறித்த அரச திணைக்களங்கள் வைத்தியசாலகளுக்கு வரும் மக்களின் உடைமைகள் பரிசோதிக்கபட்ட பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, பருத்தித்துறையில் ஒரு இஸ்லாமியக் குடும்பம் மாத்திரமே பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமையை கண்டறிந்த சிறப்பு அதிரடிப்படை அப்பகுதி பள்ளிவாசலுக்குச் சென்று மெள்லாவியிடம் விபரங்களை பெற்றுள்ளனர்.
கணிசமான இஸ்லாமியர்கள் அப்பகுதியில் தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிபிடத்தக்கது.