Home முக்கிய செய்திகள் மீண்டும் முளைத்த சோதனைச் சாவடிகள் – முப்படையினருக்கும் கூடுதல் அதிகாரங்கள்!

மீண்டும் முளைத்த சோதனைச் சாவடிகள் – முப்படையினருக்கும் கூடுதல் அதிகாரங்கள்!

343
0

நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை காரணம் காட்டி முப்படையினருக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன.

இதற்கமைய முப்படையினரும், எவரையும் எங்கு வேண்டுமானாலும் மறித்து விசாரணை, மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்த முடியும் என்பதோடு கைது செய்யும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தமக்கு சாதகமாக்கி முப்படையினரும் நாட்டின் சகல இடங்களிலும் சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனைக் கெடுபிடிகள்இல் ஈடுபட்டுள்ளனர்.

ஜநாதிபதியால் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு உட்பட்டு காவல்துறை உட்பட முப்படையினரும் செய்யக்கூடயவை யாதெனில்..

1. ஒழுங்குமுறை 20 (1) இன் கீழ் ஆயுத படையினருக்கு எந்த நபர்களையும் வேண்டிய நேரத்தில் அவசர நீதி கட்டுப்பாட்டின் கீழ் வாகனத்தை பரிசீலனை செய்யவும், கைது செய்து தடுத்து வைப்பதற்கான அதிகாரமும் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

2. ஒழுங்குமுறை 20 (2) இன் கீழ் பாதுகாப்பு படையினர் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள எந்தவொரு நபரும் இருபத்தி நான்கு மணித்தியாலங்களுக்குள் அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்திற்கு கட்டாயமாக ஒப்படைக்கப்பட வேண்டும். 

3. ஒழுங்குமுறையின் (1) பத்திரத்தின் கீழ் எந்த நபரும் வளாகத்தினிளோ, வாகனத்திலோ, கப்பலிலோ தேடுதல் செய்வதற்கான அதிகாரங்கள் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளன.

4. ஒழுங்குமுறை 24 இன் படி, இலங்கை இராணுவம், கடற்படை ,விமானப்படை மற்றும் பொலிஸாருக்கு சிறைச்சாலை கட்டளைச் சட்டம் 77 (5) இன் கீழ்இந்த உத்தியோகபூர்வ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.