மட்டக்களப்பு, பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினரால் குண்டுத் தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கு 359 சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது ஓந்தாச்சிமடம் சிமர்னா தேவாலயத்தின் அருட்தந்தை சுனில், களுவாஞ்சிகுடி சிவ ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவான சண்முக மயூரவதன குருக்கள், கல்முனை விகாராதிபதி சங்கரத்தினதேரர், பட்டிருப்புத் தொகுதி தமிழ் இளைஞர் சேனை அமைப்பினர், களுவாஞ்சிகுடி பொலிஸார், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர்.



