Home செய்திகள் வடக்கிலும் தாக்குதல் திட்டம் – தீவிர கண்காணிப்பில் முப்படை!

வடக்கிலும் தாக்குதல் திட்டம் – தீவிர கண்காணிப்பில் முப்படை!

228
0

வடமாகாணத்திலும் தாக்குதல் நடைபெற உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து முப்படையினரும் தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டிற்குள் 160 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்திற்காக உள்நுளைந்திருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்தே இக் கடும் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வடக்கின் முகமலை, இயக்கச்சி, நாவற்குழி, கேரதீவு, கைதடி, மண்டதீவு வீதி ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள் நுளையும் வாகனங்கள் அனைத்தையும் தீவிர சோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர் காவல்துறையினர்.

இதே வேளை சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் கண்கானிப்புக்களையும், சுற்றி வளைப்புக்கள், தேடுதல்கள் என அனைத்து பகுதிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மற்றும் இராணுவத்தினரும், கடற்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.