Home தாயக செய்திகள் யாழ் மற்றும் முல்லையில் நால்வர் கைது!

யாழ் மற்றும் முல்லையில் நால்வர் கைது!

189
0

யாழ்ப்பாணத்திலும், முல்லைத்தீவிலும் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த முஸ்லிம் நபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பெண் எனவும், அவர் சாட்டி பகுதியில் உள்ள குருபீடத்தில் பணியாற்றுபவர் எனவும் தெரிய வந்துள்ளது.

அத்தோடு முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய காத்தான் குடியைச் சேர்ந்த முஸ்லீம் நபர் ஒருவறையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் விடுதி ஒன்றும், யாழ்ப்பாணத்தில் வீடொன்றும் சுற்றிவளைக்கப்பட்ட போதும் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளமை மேலும் அச்சதை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பல இடங்களில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டும், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டும் வருவதால் மேலும் குண்டுத்தாக்குதல்கள் நடக்க வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மக்களை அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.