Home செய்திகள் பொலிஸ் மா அதிபர் முறையாக செயற்பட்டிருந்தால் அழிவுகளை குறைத்திருக்க முடியும்: ரவி கருணாநாயக்க

பொலிஸ் மா அதிபர் முறையாக செயற்பட்டிருந்தால் அழிவுகளை குறைத்திருக்க முடியும்: ரவி கருணாநாயக்க

241
0

பொலிஸ் மா அதிபர் முறையாக செயற்பட்டிருந்தால் அழிவுகளை குறைத்திருக்க முடியும் என மின்வலு,எரிசக்தி, தொழில்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

லலித் அத்துலத் முதலியின் 25 வது நினைவுத்தின நிகழ்வில் கலந்துக்கொண்ட கருணாநாயக்க ஊடகவியலாளர்களிடம் நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு கூறுகையில்,

நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்ப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில் படிப்பினையை பெற்றுக்கொண்டு நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியதற்கான அவசியமும் காணப்படுகிறது.

தொடர் குண்டுதாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் முறையாக செயற்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளை முடிந்தளவு குறைத்திருக்க முடியும், அத்தோடு நாட்டையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும்.

உலக முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் இந்த பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்த முடியாதவையாகவும் உருவெடுத்துள்ளன. எனவே இவ்வாறான தாக்கதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனத்துடன் செயற்படுவதே முக்கியமானதாகும்.

எனவே பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றை தீர்த்துக்கொண்டு முரண்பாடுகள் இல்லாமல் செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது எனத் தெரிவித்தார்.