Home முக்கிய செய்திகள் புதிய பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு பொன்சேகா, ரத்னாயக்கா பெயர்கள் பரிந்துரை!

புதிய பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு பொன்சேகா, ரத்னாயக்கா பெயர்கள் பரிந்துரை!

217
0

தற்போதைய பாதுகாப்பு செயலாளரான ஹேமசிறீ பெர்னாண்டோவை பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழலுக்கு காரணமாகவும், குண்டுத்தாக்குதல்களில் மக்கள் பலியாகவும் அவரது கவனக்குறைவான செயற்பாடே காரணம் என சுட்டிக்காட்டியே பதவி விலகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை புதிய பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு சரத் பொன்சேகா மற்றும் தயாசிறீ ரத்னாயக்கா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளது.

இதில் பெயர் முன்மொழியப் பட்டவர்கள் இருவரும் முன்னாள் ஆட்சியாளர்களுக்கு மிக நெருக்கமாகவும், நம்பிக்கையாகவும் இறுதி யுத்தத்தின் போது செயற்பட்டவர்கள் ஆவர். ஆனால் தற்போது சரத் பொன்சேகா மகிந்த, மற்றும் கோத்தபாய விற்கு நேர் எதிரியாக இருப்பவர். அதேவேளை தயாசிறீ தர்னாயக்கா அப்போது முதல் இப்போது வரை கோத்தபாயவிற்கு நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதில் ஜனாதிபதியின் விருப்பிற்கேற்ப தெரிவானால் தயாசிறீ ரத்னாயவுக்கே இப்பதவி வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது.