Home செய்திகள் பர்தா அணிந்து உரு மறைத்து திருந்த நபர் மடக்கி பிடிப்பு!

பர்தா அணிந்து உரு மறைத்து திருந்த நபர் மடக்கி பிடிப்பு!

201
0

வத்தளைப் பகுதியில் பர்தா அணிந்து உருமறைப்பில் திரிந்த நபரை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

இன்று மதியம் வத்தளைப் பகுதியில் பர்தார் அணிந்து சென்றவரின் நடையில் சந்தேகம் கொண்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் இடைமறித்து விசாரித்துள்ளார். உடனும் அப் பகுதியில் நின்ற மக்களும் அங்கு கூடியுள்ளனர்.

கேட்ட கேள்விகளுக்கு தடுமாறி பதில் சொன்னதாலும், குரலில் கரகரப்பு தெரிந்ததாலும் சந்தேகம் கொண்டு பர்தாவை விலக்கி பார்த்த போது ஆண் ஒருவரே அவ்வாறு பர்தார் அணிந்து உருமறைப்பில் திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக குறித்த நபரை நையப்புடைத்து காவல்துறையினருக்கு அறிவித்து அவர்களிடம் ஒப்படைத்தும் உள்ளனர்.

மக்கள் விழிப்பாக செயற்பட்டு வருவதால் பல இடங்களில் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டும், சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டும் வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.