
இலங்கையில் இடம்பெற்ற கொடூர குண்டுத்தாக்குதல்களில் பலியான மக்களுக்காக ஆத்மசாந்திப் பூசை ஒன்று இலண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது.
நேற்று (23/04) செவ்வாய்க்கிழமை லண்டன் ஈலிங் அம்மன் ஆலயத்ததில் ஆலய நிர்வாகத் தலைவர் திரு. கருணைலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த பூசை நிகழ்வில், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா, கவுன்சிலர் தாரிக் முஹமட் , கவுன்சிலர் முனீர் அஹமட், ஹறோ கவுன்சில் முன்னாள் மேயர் திரு. நிஸாம் இஸ்மாயில் முன்னாள் ஹறோ கவுன்சிலர் தயா இடைக்காடர்ம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளைத் தலைவர் திரு.இரட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பெருமளவான மக்களும் கலந்துகொண்டு இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

