
நீர்கொழும்பு கட்டான கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது அங்கு பலத்த பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டதுடன் குறித்த ஆலயப் பகுதியெங்கும் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் சோகக் காடாக கட்சியளித்தது.