
இலங்கையில் நேற்று முந்தினம் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் பலியான 300 க்கும் மேற்பட்டவர்களுக்காக இன்று நாடு முழுவதும் அஞ்சலிக்கிறது.
அரச நிறுவனங்கள், பாடசாலைகள், படை முகாம்கள் என அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளதோடு, மூன்று நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்றைய நாளை தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்குமாறு நேற்றைய தினம் அரசாங்கம் அறிவித்திருன்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய இன்று யாழ்-மாவட்ட செயலகத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் பணியாளர் அனைவரும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
