Home முக்கிய செய்திகள் அவிசாவளையில் குண்டுகளை தயாரித்த 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது!

அவிசாவளையில் குண்டுகளை தயாரித்த 9 பாகிஸ்தானியர்கள், 3 இந்தியர்கள் கைது!

197
0

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது,

சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது தெரிவித்தனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என்று காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

\