நீர்கொழும்பு – கட்டுவபிட்டி புனித செபஸ்ரியான் ஆலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடாத்தியவர் வெளியில் இருந்து உள்ளே வந்து குண்டை வெடிக்க வைப்பது வரையான முழு வீடியோ பதிவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்திருந்தனர்.
அத்தோடு இது போன்று அன்றைய தினம் நடாத்தப்பட்ட 8 குண்டுத்தாக்குதலில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 300 ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.