Home செய்திகள் தென்னிலங்கையைச் சேர்ந்த இருவர் மன்னாரில் கைது!கிளைமோர் குண்டு மீட்பு!!

தென்னிலங்கையைச் சேர்ந்த இருவர் மன்னாரில் கைது!கிளைமோர் குண்டு மீட்பு!!

168
0

மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய தென் பகுதியைச் சேர்ந்த இரு  இளைஞர்களை கிராம மக்கள் இன்று (22/04) காலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்தோடு தலைமன்னார் பிரதான வீதியோர காணி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டு ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் தாழ்வுபாட்டு கிராமத்திற்குள் சென்ற குறித்த இரு இளைஞர்களும் தாழ்வுபாட்டு தேவாலய பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியுள்ளனர்.

இதனை அவதானித்த கிராம மக்கள் நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்தீர்கள் என கேட்டதிற்கு முறண்பட்ட பதிகளை தெரிவித்தமையால் உடனடியாக மடக்கிப்பிடித்துள்ளனர்.

அவர்களுடைய அடையாள அட்டையினை பரிசோதித்த போது அவர்கள் 25 மற்றும் 35 வயது மதிக்கத்தக்க கொழும்பு மற்றும் நிட்டம்புவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததை அடுத்து காவல்துறையினரிடம் குறித்த நபர்களை மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

நாட்டில் இடம் பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் மக்கள் அச்சத்துடனும் விழிர்ப்புணர்வுடனும் காணப்பட்ட நிலையிலே குறித்த சந்தேகத்திற்கு இடமான இரு நபர்களும் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.