
இலங்கைத் தீவை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று (21/04) நடைபெற்ற இரக்கமற்ற குண்ன்டுத் தாக்குதல்களை இஸ்லாமிய தீவிரவாதிகளே செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட 9 குண்டுத் தாக்குதல்களில் ஆறு குண்டுத்தாக்குதல்கள் தற்கொலை (scicide bomber) குண்டுத்தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த குண்டுத் தாக்குதல்களில் இதுவரை 289 பேர் உயிரிழந்துள்ளதுடன், 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், குண்டுத்தாக்குதலுக்கான காரணம், அதன் சூத்திரதாரிகள் யார் என்பதை அறிய பல கோணங்களில் இடம்பெற்ற தேடுதல்கள், விசாரணைகளில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் இரக்கமற்ற செயலே இக் கொடூர கொலைகளுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

இக் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பெண்கள் சிலர் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
அதே வேளை விசாரணைகளில் கிடைத்த தகவல்களை அடுத்து குண்டுத்தாக்குதலை நடாத்தியதாக கருதப்படும் நபர்கள் தங்கியிருந்த வீடொன்றும் சுற்றிவளைக்கப்பட்டது. அத்தோடு அங்கும், வேறு சில இடங்களிலும் குண்டுகள், துப்பாக்கி ரவைகள், உட்பட சில ஆயுதங்களையும் சிறீலங்கா காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்லாமிய தீவிரவாதி ஒருவர் தாங்கள் பளிதீர்ப்போம், எம்மைச் சேர்ந்த தற்கொலை வீரர்கள் சிரித்துக்கொண்டே குண்டுகளோடு திரிகின்றனர். உங்களுக்கு சிதறுகின்ற உடல்களை பொறுக்கி எடுக்கவே நேரம் சரியாக இருக்கும். என பல விடையங்களை சொல்லும் காணோளிப்பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
குண்டுதாரிகள் இருந்ததாக கூறப்படும் வீடு ஒரு பிரபல முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அத்தோடு அவுஸ்திரேலியாவில் பட்டப்படிப்பை முடித்த அவரின் மகன் (26 வயது) குண்டுத்தாக்குதலில் பலியாகியுள்ளார். இதனால் அவர் குண்டுதாரியாக சென்று குண்டை வெடிக்கவைத்தாரா என விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.