Home செய்திகள் இலங்கை குண்டு வெடிப்பில் 3 இந்தியர்கள், 5 பிரித்தானியர்கள் உட்பட 35 பேர் வெளிநாட்டவர் பலி!

இலங்கை குண்டு வெடிப்பில் 3 இந்தியர்கள், 5 பிரித்தானியர்கள் உட்பட 35 பேர் வெளிநாட்டவர் பலி!

142
0

உலகெங்கும் பேசுபொருளாக மாறியுள்ள இலங்கையில் இடம்பெற்ற நேற்றைய குண்டு தாக்குதல்களில் பலியானோரில் 35 வெளி நாட்டவர்களும் உள்ளடங்கியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களிலேயே அதிகளவான வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுள் இந்தியாவைச் சேர்ந்த மூவரும், பிரித்தானியாவைச் சேர்ந்த ஐவரும், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மூன்று பிள்ளைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு சுவிஸ் நாட்டில் இருந்து இரு பிள்ளைகளுடன் வந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த தமிழ் குடும்பத்தை சேர்த்த கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளதாகவும், பிள்ளைகள் காயங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் தெரியவருகிறது.