Home செய்திகள் இன்று இரவு முதல் அமுலுக்கு வருகிறது அவசரகாலச் சட்டம்!

இன்று இரவு முதல் அமுலுக்கு வருகிறது அவசரகாலச் சட்டம்!

194
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் தேசிய பாதுகாப்புச் சபை கூடியபோது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்களையும் வழங்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதே வேளை நேற்று இரவு நடைமுறையில் இருந்த ஊறடங்குச் சட்டம் இன்று காலை நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு நாளும் இரவு 6:00 மணி மறு நாள் காலை 6:00 மணிவரை ஊறடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.