Home செய்திகள் யாழ் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு – எங்கும் மக்களை கூட்டமாக நிற்கவேண்டாமென எச்சரிக்கை!

யாழ் நல்லூர் ஆலயத்திற்கு பலத்த பாதுகாப்பு – எங்கும் மக்களை கூட்டமாக நிற்கவேண்டாமென எச்சரிக்கை!

175
0

யாழ் நல்லூர் ஆலயதை சுற்றி காவல்துறையினரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நடைபெற்ற வெவ்வேறு குண்டுத்தாக்குதல்களில் 140 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக தேவாலயங்கள் குறி வைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப் பட்டமையால் வடக்கில் இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயமான நல்லூரின் பாதுகாப்பை உறுதி செய்யவே படைகள் குவிக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

வீதிகளில் ஒலிபெருக்கி வாகனங்களுடன் செல்லும் பொலிஸார் மக்களை தவிர்ந்த புதுமுகம் கொண்ட நபர்களை கண்டாலும், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடி திரிபவர்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் கூட்டமாக நிற்க வேண்டாம் என்றும், வீடுகளுக்குள் இருக்குமாறும் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தி வருகின்றனர்.