Home முக்கிய செய்திகள் மேலும் 3 இடங்களில் குண்டு வெடிப்பு – அமுலுக்கு வந்தது ஊறடங்கு சட்டம்!

மேலும் 3 இடங்களில் குண்டு வெடிப்பு – அமுலுக்கு வந்தது ஊறடங்கு சட்டம்!

251
0

இலங்கையில் மேலும் மூன்று இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளன. இன்று காலை முதல் இதுவரை 9 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இதுவரை வெளிவந்த தகவலின் படி 160 ஐ தாண்டியுள்ளது.

மக்களை இலக்கு வைத்தே அனைத்துத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

ஆறு இடங்களில் இன்று காலை குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்ற நிலையில் இன்று மாலை தெமட்டகொட, டெய்வள, மொறட்டுவ ஆகிய பகுதிகளிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

முடிவற்று தொடரும் குண்டுவெடிப்புக்களால் கொழும்பில் உடனடியாக ஊறடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.