Home செய்திகள் நாட்டில் அசாதாரண சூழல் – அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாள் விடுமுறை:

நாட்டில் அசாதாரண சூழல் – அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாள் விடுமுறை:

187
0

இந்றைய குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் இரு நாள் விடுமுறை அளிப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களை இலக்கு வைத்து மேலும் குண்டுத்தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சத்தினாலேயே மேற்படி அறிவிப்பை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

அத்தோடு நாட்டின் அனைத்து பகுதிகளிலும், மக்கள் அதிகமாக கூடும் மத ஸ்தலங்கள், பாடசாலைகள், விடுதிகள், தொடரூந்து நிலையங்கள் என்பவற்றில் காவல்துறையினரர், மற்றும் அதிரடிப்படையினருடன் இணைந்து இராணுவத்தினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.