
புனித உயிர்த்த ஞாயிறு தினமான இன்று இலங்கையின் ஆறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை 114 பேர் பலியாகியுள்ளதாகவும், 400 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களில் சுற்றுலாப்பயணிகளான 11 பேர் வெளிநாட்டவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
2 மணித்தியாலங்களுக்குள் ஆறு இடங்களில் திட்டமிட்ட வகையில் குண்டுகள் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. இதே வேளை மட்டக்களப்பில் கிறிஸ்த்தவ தேவாலயம் ஒன்றில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறை மாஅதிபர் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடந்த 11/04/2019 அன்று எழுத்து மூலம் தெரியப்படுத்தியிருந்த நிலையில் 10 நாட்களின் பின் இன்று இக் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.