Home செய்திகள் குண்டுவெடிப்பில் காயமுற்றவர்களை பார்வையிட்டார் விக்னேஸ்வரன்:

குண்டுவெடிப்பில் காயமுற்றவர்களை பார்வையிட்டார் விக்னேஸ்வரன்:

145
0

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் காயம் அடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்னேஸ்வரன்.

இன்று (21/04) காலை இடம்பெற்ற குறித்த குண்டு வெடிப்பில் சியோன் தேவாலயத்தில் மட்டும் 52 பேர் பலியாகியதோடு, 50க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்துள்ளவர்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இந் நிலையிலேயே மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நேரில் சென்று காயமுற்ரவர்களை பார்வையிட்டுள்ளார் விக்னேஸ்வரன்.

இதேவேளை, காயமுற்ரவர்களுக்கான சிகிச்சைக்கு இரத்தம் போதாது இருப்பதாகவும், இரத்தம் வழங்க முன்வருமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது மட்டு வைத்தியசாலை.