
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், நேற்று (20/04) மாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.
உரும்பிராய் இலங்கை வங்கிக்கு முன்பாக உந்துருளியும், முச்சக்கர வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று, மோதி ஏற்பட்ட குறித்த விபத்தில் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 19 வயதுடைய யோகேந்திரன் தமிழரசன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
மேலும் மேற்படி சம்பவத்தில் படுகாயங்களுக்கு உள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞனும் முச்சக்கர வண்டிச் சாரதியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.