Home முக்கிய செய்திகள் இலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு – 42 பலி, 286 பேர் காயம்!

இலங்கையில் 6 இடங்களில் குண்டுவெடிப்பு – 42 பலி, 286 பேர் காயம்!

212
0

இலங்கையில் 6 இடங்களில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ளதுடன் 286 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று 5 நட்சத்திர விடுதிகளிலும், மூன்று தேவாலயங்களிலும் குண்டுகள் வெடித்துள்ளன.

1. கொச்சிக்கடை அந்தோனியார்

2.நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்

3. மட்டக்களப்பு புளியந்தீவு மரியாள் தேவாலயம்

4. சங்கரில்லா ஹொட்டல்

5. சினமன் கிராண்ட்

6. கிங்ஸ்பெரி ஹொட்டேல்

கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும், இடம்பெற்ற குண்டுவெடிப்பிலேயே அதிகளவானோர் பலியாகியுள்ளதுடன், காயமடைந்துமுள்ளனர்.

நட்சத்திர விடுதிகள் மீதான குண்டுத்தாக்குதலில் வெளிநாட்டவர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.