Home செய்திகள் அமைதி காக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

அமைதி காக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

159
0

இலங்கைத் தீவை உலுக்கியுள்ள இன்றைய குண்டு வெடிப்பு சம்பவங்கள் மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன பதற்றம் அடையாது இருக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இக் குண்டுவெடிப்புக்களின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் சீர் குலைக்கும் எந்த சக்திக்கும் இடமில்லை எனவும், விசாரணைகளுக்கு மக்களை ஒத்துளைக்குமாறும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.