
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு கரகம் எடுப்பது தொடர்பில் இடம்பெற்ற வாய்த் தர்க்கம் முற்றி வாள் வெட்டில் முடிந்ததில் 8 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு கரகம் எடுப்பது தொடர்பாக, கம்பர்மலை வன்னிச்சி அம்மன் கோவிலடியில் நேற்றிரவு இரு தரப்பினர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு பின்னர் வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 8 பேரும் ஊறணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணையை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.