Home செய்திகள் முகநூலில் Like செய்த விவகாரம் – முன்னாள் போராளியை அழைத்து 4ம் மாடியில் விசாரணை!

முகநூலில் Like செய்த விவகாரம் – முன்னாள் போராளியை அழைத்து 4ம் மாடியில் விசாரணை!

166
0

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை குறித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்ரைய தினம் (19/04) நான்காம் மாடிக்குச் சென்றிருந்த குறித்த முன்னாள் போராளியிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் 2 மணி நேர விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் விடுவித்துள்ளனர்.