
ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார் மகிந்த ராஜபக்ச.
வருடாந்த திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நுவரெலியான ஹாவாஎலிய ஶ்ரீ முத்தமாரியம்மன் ஆலயத்திற்கு மனைவி சிராந்தியுடன் சென்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஆலயத்தை சுற்றி தரிசனம் செய்ததுடன் சிறப்பு வழிபாட்டிலும் கலந்துகொண்டார்.
இவர்களுடன் விசேட அபிவிருத்தி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் கலந்துக்கொண்டிருந்தனர்.
