Home செய்திகள் வைத்தியசாலையில் உடல் பாகங்கள் திருடப்படுகிறதா.. ? மக்கள் சந்தேகம்!

வைத்தியசாலையில் உடல் பாகங்கள் திருடப்படுகிறதா.. ? மக்கள் சந்தேகம்!

143
0

முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட உடலில் பாகங்கள் திருடப்பட்டுள்ளதா…? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது;

கடந்த திங்கட்கிழமை அன்று மல்லாவி துணுக்காய் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஓர் இளைஞன் உயிரிழந்திருந்தார். அவருடைய உடல் முல்லைத்தீவில் அமைந்துள்ள மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. மறுநாள் செவ்வாய்க்கிழமை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் போது கறுப்பு நிற பிளாஸ்டிக் பாக் கொண்டு அவ்வுடலை யாரும் பார்வையிட முடியாத அளவிற்கு மூடி கட்டப்பட்டிருந்தது.

இதனாலேயே குறித்த சடலத்தில் இருந்து உடல் பாகங்கள் திருடப்பட்டுள்ளதா..? என மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,

ஒரு விபத்தில் இறந்தவருடைய உடலை ஏன் இவ்வாறு மூடிக் கட்ட வேண்டும்..? இறந்தவருடைய உறவினர்கள் கடைசி நிமிடத்தில் அவன் முகம் காணவும், இறுதிச் சடங்குகள்ஐ செய்யவும் துடிப்பார்கள் என தெரியாதா? இதற்கு என்ன காரணம்..? மருத்துவ அதிகாரிகளின் கவனக்குறைவால் உடல் சிதைந்துள்ளதா..? அல்லது குறித்த உடலில் இருந்து உடல் பாகங்களை திருடி விற்று பணம் சம்பாதிக்கிறார்களா..? என பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

போராட்ட காலகட்டத்தில் மாஞ்சோலை வைத்தியசாலை என்பது ஏராளமான பிரச்சனைகளுக்கு மத்தியிலும் பல உயிர்களை காப்பாற்றி நின்றது. இது உலகறிந்த உண்மை இன்று சகல வசதிகள் இருந்தும் ஓர் உடலைப் பாதுகாக்க முடியவில்லை இதற்கு முற்றுமுழுதாக மருத்துவர்களே பொறுப்பு கூற வேண்டும்.

அத்தோடு இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றனர்.