Home செய்திகள் பூநகரி-கௌதாரி முனையில் 1703 ஏக்கர் நிலத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! மக்கள் எதிர்ப்பு:

பூநகரி-கௌதாரி முனையில் 1703 ஏக்கர் நிலத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்! மக்கள் எதிர்ப்பு:

353
0

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி-கௌதாரி முனைப்பகுதியில் 1703 ஏக்கர் நிலத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு அப்பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ் விடையம் தொடர்பில் மக்கள் ஒன்றிணைந்து பிரதேசசெயலரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர். இதேவேளை பூநகரிப் பிரதேசசபையின் தவிசாளரினாலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதாரி முனைப்பகுதியில் அரசமற்றும் தனியார் காணிகள் உள்ளடங்கலாக 1703 கெக்ரேயர் நிலப்பரப்பில் காற்றலை மின்உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் பல்வேறுமட்டங்கடளிலும் இடம்பெற்று வந்த நிலையிலேயே விழிப்படைந்த மக்கள் தம் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

குறித்த காற்றலை மின் உற்பத்திநிலையங்கள் காற்றாடிகள் அமைக்கப்படும் போதும் தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்தொழில், விவசாயம், கால்நடைவளர்ப்பு என்பவற்றில் பாதிப்புக்கள் ஏற்படும் எனவும் இதனால் தாங்கள் இந்தப் பிரதேசங்களைவிட்டு இடம்பெயர வேண்டியநிலை ஏற்படும் எனவும் கிராமமட்ட பொது அமைப்புக்களும் கிராம மக்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.