Home தாயக செய்திகள் தென்மராட்சியில் 10 ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு!

தென்மராட்சியில் 10 ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு!

213
0

நுகர்வோரின் நலன்கருதி சிற்றுண்டி வகைகளை 10 ரூபாவுக்கு விற்பனை செய்யும் சிற்றுண்டி நிலையம் ஒன்று திறந்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நுகர்வோருக்கான மற்றொரு சேவையாக சங்கத் தலைமையகக் கட்டடத்தில் குறித்த சிற்றுண்டி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சங்கத் தலைவர் செ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் கலந்து கொண்டார்.