Home செய்திகள் தியாகத் தாய் “அன்னை பூபதி” இன் 31ம் ஆண்டு நினைவு இன்று!

தியாகத் தாய் “அன்னை பூபதி” இன் 31ம் ஆண்டு நினைவு இன்று!

203
0

நீதி கேட்டு தள்ளாத வயதிலும் விடுதலை உணவோடு தன்னின மக்களின் உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் உண்ணா விரதப் போராட்டம் நடாத்தி முப்பத்தோராம் நாள் தியாகமரணத்தை தளுவிய தியாகத் தாய் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

1988 மார்ச் மாதம் 19 ஆம் திகதி இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து மாமாங்கப் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக தனது போராட்டத்தை ஆரம்பித்த பூபதி தாய் 19 ஏப்ரல் 1988 அன்று தியாக மரணத்தை தழுவியிருந்தார்.

திலீபன் இட்ட நெருப்பு தமிழீழப் பரப்பெங்கும் பற்றி உள்ளிருந்த உணர்வை தட்டியெழுப்பி போராட்டதில் மக்களை ஈடுபட வைத்தது போல் தியாகத் தாய் அன்னை பூபதியின் மரணமும் தமிழீழ பெண்களை எழுச்சி கொள்ள வைத்திருந்தது.