
இத்தாலி நாட்டில் வீதியோரமாக இருந்த புகழ்பெற்ற சிலை ஒன்றை உடைத்த நபரை அந் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமியர் ஒருவரின் இச் செயலால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.
வீதியோரமாக உயரத்தில் இருந்த புகழ் பெற்ற சிலைமேல் ஏறி குறித்த நபர் பாரிய சுத்தியலால் அடித்து அடித்து சிலையை சேதப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தை கண்ட மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அனுப்பியதோடு சேதத்தை தடுக்கும் முகமாக குறித்த நபர் மீது கற்கள், தடிகள் கோண்டு எறிந்துமுள்ளனர். இருப்பினும் எதையும் பொருட்படுத்தாது குறித்த நபர் சிலை உடைப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்துள்ளார்.
அவ்விடத்திற்கு விரைந்துவந்த காவல்துறையினர் அவரை அவ்விடத்தில் இருந்து இறக்கி கைதுசெய்துள்ளனர்.