
இலங்கையின் வடபகுதியில் இரு வேறு இஅடங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதோடு, வீடொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.
தெந்மராட்சி-மீசாலைப்பகுதியில் மரம் ஒன்றின் மீது ஏற்பட்ட மின்னல் தாக்கதினால் அதன் கீழிருந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீசாலை வடக்கு தட்டாங்குள பிள்ளையார் வீதியைச் சேர்ந்த அம்பலவாணர் சிவசுப்பிரமணியம் (வயது- 65), அப்புக்குட்டி சிவசுப்பிரமணியம் (வயது – 65) ஆகியோரே அவ்வாறு மின்னலால் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் ஆவர்.
இதே வேளை மன்னார்-மாந்தை பகுதியில் வீடொன்றிற்கு அருகில் நின்ற தென்னை மரத்தில் மின்னல் தாக்கி வீட்டையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் வீடில் இருந்த பொருட்கள் உட்பட வீட்டின் அரைவாசிப் பகுதிக்கு மேல் தீயில் கருகியுள்ளது.
இருப்பினும், வீட்டுரிமையாளர் குடும்பமாக வெளியில் சென்றிருந்தமையால் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
