
மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவ முகாம்கள் தேவை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எனவே மக்களின் சொந்த நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் முழுமையான படை விலக்கல் சாத்தியமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும், “அரசே கூறினாலும் வடக்கு மாகாணத்திலிருந்து இருந்து படைகளை முழுமையாக விலக்க முடியாது” என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவும் தெரிவித்திருந்தமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மக்கள் அவர்களின் சொந்த நிலத்தில் வாழவேண்டும். படையினரின் வசதிக்காக அவர்களை வெளியிடங்களுக்கு மாற்ற முடியாது என்றும் இதற்கு ஒருபோதும் மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் நிலங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டிருப்பதால் மக்கள் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்…
வேளை, வடக்கு கிழக்கில் சிலபகுதிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் மக்களின் பல காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது நிலங்களை விடுவிக்கக்கோரி கேப்பாப்புலவு மக்கள் நீண்ட காலமாக ஜனநாயக வழியில் போராடி வருகின்றன ரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்களின் நிலங்களிலிருந்து இராணுவம் உடன் வெளியேற வேண்டும் என்றும் மக்கள் வசிக்கும் இடங்களில் இராணுவமுகாம்கள் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.