Home தாயக செய்திகள் வாள்கள், கோடாரிகளுடன் யாழில், 13 பேர் கைது!

வாள்கள், கோடாரிகளுடன் யாழில், 13 பேர் கைது!

172
0

வாள்கள், கோடாரி, கத்தி, இரும்பு கம்பி போன்ற கூரிய ஆயுதங்களுட்அன் 13 தமிழ் இளைஞ்ஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இவர்களை ஆயுதங்களுட்அன் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கீரிமலைப் பகுதியில் வைத்து 4 இளைஞர்களும், மானிப்பாய் பகுதியில் 8 இளைஞ்ஞர்களும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் கூரிய ஆயுதங்கள் உட்பட ரொக்கமாக இருந்த பணத்தினையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு அனைவரியும் தடுத்து விசாரித்து வருகின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்களின் கைத்தொலைபேசிகளை ஆராய்ந்த காவல்துறையினர் அதில் வாழ் வெட்டுக் குழு தொடர்பான பல படங்கள் கிடைத்துள்ளதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட பலருக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருப்பதாகவும் தெரிவித்ததோடு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி வரை குறித்த நபர்களை தடுப்பில் வைத்து மேலதிக விசாரணைகள் நடாத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.