Home தாயக செய்திகள் வடமராட்சியில் – 18 வயது மாணவி தீயிட்டு தற்கொலை!

வடமராட்சியில் – 18 வயது மாணவி தீயிட்டு தற்கொலை!

195
0

வடமராட்சி – நவிண்டில் பகுதியில் தனக்குத் தானே தீமூட்டிய 18 வயது மாணவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;

குடும்பத் தகராறு காரணமாக திடீரென விபரீத முடிவெடுத்து தன்மேல் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துள்ளார் குறித்த மாணவி. புதுவருடப் பிறப்பிற்கு முதல் நாளான கடந்த சனிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அங்கிருந்தவர்களால் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டு பருத்தித்துற்ஐ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்திருந்தது.

இருப்பினும் உடலில் 80% (வீதம்) க்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தமையால் சிகிச்சை பலனின்றி இன்று காலை குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.